மேலும்

Tag Archives: விகாரை

2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம்

முல்லைத்தீவு – நாயாறில் குருகந்த ரஜமகாவிகாரை  2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்று  சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்துள்ளார்.

வடக்கு அரசியல்வாதிகளே நாவற்குழி விகாரை அபிவிருத்திக்கு தடை- விகாராதிபதி குற்றச்சாட்டு

வடக்கில் உள்ள சில தீவிரப் போக்குடைய அரசியல்வாதிகளே நாவற்குழியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக, அதன் விகாராதிபதியான ஹன்வெல்ல ரத்னசிறி தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

தையிட்டியில் புதிய விகாரையை அமைக்க காணி அளவீடு

வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுடெல்லியில் பௌத்த விகாரை, கலாசார நிலையம் அமைக்க சிறிலங்கா திட்டம்

புதுடெல்லியில் விகாரை ஒன்றையும், சிறிலங்கா கலாசார நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும், தேவையான காணிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளுக்கு இராணுவ பாதுகாப்பு

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. சிங்கள நாளிதழான திவயின இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தன்னையும் இராணுவத்தினரையும் போர்க்குற்றங்களில் சிக்கவைக்க முயற்சி என்கிறார் மகிந்த

தன்னைப் போர்க்குற்ற வழக்கில் சிக்க வைக்கவும், தன்னையும், சிறிலங்கா இராணுவத்தினரையும் காட்டிக்கொடுத்து ஆட்சியைத் தக்கவைக்கவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.