சிறிலங்கா தேயிலை மீதான தடையை நீக்கியது ரஷ்யா
சிறிலங்காவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தற்காலிக தடையை நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தற்காலிக தடையை நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய- சிறிலங்கா இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டை முன்னிட்டு, சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்படவிருந்த சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா தடை விதித்தமைக்கு பழிவாங்கும் வகையிலேயே, சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்திருக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிகத் தடையை விதித்துள்ள நிலையில், அந்தச் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் கென்யா இறங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதித்த தடை குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்திருப்பது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.
நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, சிறிலங்கா இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொகான் பலேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படை ஜெட் போர் விமானங்கள் உள்ளிட்ட 18 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்காக, 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது.