முல்லைத்தீவு செல்கிறார் சிறிசேன – எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை தேடி சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், 14 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மன்னார் – சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் வரும் ஜனவரி மூன்றாவது வாரம், காபன் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கொட்டிய கடும் மழையினால், குளங்கள் நிரம்பி, வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன், புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான்கதவு ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார்.
முல்லைத்தீவு – அலம்பில், நித்திகைக்குளம் பகுதியில், சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஆறு விவசாயிகளை சிறிலங்கா விமானப்படையினர், இன்று உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.