மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்காது என்று, அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி யாரும் வெற்றிபெற முடியாது- துமிந்த திசநாயக்க

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல், பொதுஜன பெரமுனவினாலோ, ஐதேகவினாலோ, புதிய அதிபரை தெரிவு செய்ய முடியாது என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் – உச்சநீதிமன்றத்தை நாடினார் சிறிலங்கா அதிபர்

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளார்.

கோத்தா அதிபரானால் நாடு நாசமாகி விடும் – சந்திரிகா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டிருப்பது, ஆபத்தானது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நொவம்பரில் நாட்டின் அதிபராவேன் – பதுளையில் சஜித் சூளுரை

ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக, பதுளையில் நேற்று பாரிய கூட்டம் நடத்தப்பட்டது. இங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாச, நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாகவும், வரும் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.

அடுத்த அதிபர் மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார்- மங்கள சமரவீர

சிறிலங்காவின் அடுத்த அதிபர் மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் வேட்பாளரும் தயார் – வரும் ஞாயிறு அறிவிக்கப்படுவார்

அதிபர் தேர்தலில் நிறுத்தப்போகும் வேட்பாளரை ஜேவிபி தீர்மானித்து விட்டது என்றும், ஆனால் ஓகஸ்ட் 18ஆம் நாள் வரை அதனை வெளிப்படுத்தப் போவதில்லை என்றும் கட்சியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைவேன் – சஜித்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று ஐதேகவின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கோத்தாவை அறிவிக்க முன்னர் மகிந்தவை சந்தித்த அமெரிக்க உயர் அதிகாரி

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார்.

மைத்திரியைச் சந்திக்கிறார் கோத்தா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக இன்று பெயரிடப்படுவார் என எதிர்பார்க்கப்படும், கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்த வாரம் சந்திக்கவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.