மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய, இந்திய, பங்களாதேஷ் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.

குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா – விசாரணை நடத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உறுதி

கச்சதீவுக் கடலில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது.

ஐ.நாவுக்கான மனுக்களில் கையெழுத்துக் குழறுபடிகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று கோரியும், அனுப்பப்பட்ட மனுக்களில் போலியான கையெழுத்துகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்புச் சவால்கள் குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கம்

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் இளம் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

நான்கு நாடுகளின் தலைவர்களை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்க அதிபர் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்களுடன் இன்று இரதுரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு செயலிழந்து விட்டது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

சிறிலங்காவின் பலம் வாய்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு இப்போது முற்றாக செயலிழந்து விட்டதாக போர்க்குற்றம்சாட்டப்பட்ட – ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

போர் முடிந்த பின் முதல் முறையாக சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை திடீர் சரிவு

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தொடர்ச்சியாக அதிகரித்து வந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் திடீர் சரிவைச் சந்தித்துள்ளது.

அனைத்துலக சமூகத்துக்கு முதுகெலும்பைக் காட்டிவிட்டேன் – சிறிலங்கா அதிபர்

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்துக்குள்ளாகவே, அதனைத் தான் நிராகரித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – கூட்டமைப்பு வரவேற்பு

அனைத்துலகப் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

கலப்பு நீதிமன்றத்தை அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் – ரணில்

கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது அரசியல் ரீதியாகச் சாத்தியமற்றது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுகூறியுள்ளார்.