மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அரசியல் நெருக்கடிக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு – சிறிலங்கா அதிபர்

மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் செயற்பட இடைக்கால தடைவிதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று மாலை சிறிலங்கா அரசியலில் திடீர் திருப்பங்கள் நிகழும் வாய்ப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  இன்று நாளை நடத்தவுள்ள இரண்டு முக்கிய சந்திப்புகளை தொடர்ந்து,   திடீர் அரசியல் மாற்றங்கள் நிகழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐதேமுவை வெட்டிவிட்டு பசில் குழுவுடன் இரவிரவாக மைத்திரி ஆலோசனை

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் ரத்துச் செய்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுணதீவு காவல்துறையினர் கொலை – முன்னாள் போராளி சரண்

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச் சாவடியில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த, சிறிலங்கா காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்ட ஒருவர், நேற்று கிளிநொச்சி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கூட்டமைப்பு, ஐதேகவுக்கு ஒதுக்கிய நேரத்தில் மகிந்தவுடன் இருந்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னரே சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

புதிய பிரதமரை நியமிக்குமாறு பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி

புதிய பிரதமரை நியமிக்குமாறு எதிர்வரும் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் நியமனத்துக்கு எதிராக தம்பர அமில தேரர் உச்சநீதிமன்றில் மனு

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில், அடிப்படை உரிமை என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வண. தம்பர அமில தேரர் இன்று இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மௌனத்தை உடைத்தார் துமிந்த திசநாயக்க – மைத்திரிக்கு எதிராக புதிய அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள், தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

‘நம்பிக்கையில்லா பிரேரணை – எனக்கு வைத்த பொறி’

தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால் தான், கடந்த நொவம்பர் 14ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தான் நிராகரித்ததாக  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – என் வாழ்நாளில் அது ஒருபோதும் நடக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.