மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

தீர்ப்புக்காக காத்திருக்கும் அனைத்துலக நிதி நிறுவனங்கள் – சீனாவும் கைவிரிப்பு

அரசியல் நெருக்கடிகளால், சிறிலங்காவுக்கு கடன் வழங்க இணங்கிய பல அனைத்துலக நிதி  நிறுவனங்கள், தமது முடிவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள். வெளியாகியுள்ளன.

இரணைமடு : வரலாற்றை புரட்டிப் போட்ட மைத்திரி

சுமார் 100 ஆண்டுகளைக் கொண்ட இரணைமடு குளத்தின் வரலாற்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைகீழாக மாற்றியுள்ளார்.

சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக  ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் தேர்தல் நடத்துவதை நாங்கள் தடுக்கவில்லை – அமெரிக்க தூதுவர்

தற்போதைய அரசியல் நெருக்கடியை  வெளிப்படையான முறையில்,  ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு நிபந்தனை விதிப்பது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இறுதி முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலர்களும் பதவியிழப்பு?

அமைச்சரவை  கலைக்கப்பட்டதை அடுத்து, அமைச்சுக்களின் செயலர்களும் பதவி இழந்து விடுவார்கள் என்றும்,  இதனால் தற்போது சிறிலங்காவில் அமைச்சுக்களின் செயலர்கள் எவரும் பணியாற்ற முடியாது எனவும் சட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

புதிய பிரதமராக சமல் அல்லது நிமல் – சிறிலங்கா அதிபர் ஆலோசனை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த,  சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை, கூடிய விரைவில் பிரதமராக நியமிப்பது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  ஆலோசித்து வருவதாக, அதிபர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை? – ஐதேகவின் அடுத்த நகர்வு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்தவுக்கு காத்திருக்கும் அடுத்த அடி – உச்சநீதிமன்றில் உடனடி விசாரணை சாத்தியமில்லை

மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்றத்தை நாடி இடைநிறுத்தும் மகிந்த தரப்பின் முயற்சிக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் குழப்பம் – முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலையில் இரு வெவ்வேறு சந்திப்புகளிலும், குழப்பமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.