இன்று வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை, இன்று பகிரங்கப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை, இன்று பகிரங்கப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு, அமெரிக்காவில் கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஆறு எலும்புக் கூடுகளும், 1499 – 1719 ஆண்டுகளுக்கிடையில் புதைக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பி, ஐ.நா தலையீடுகளை எதிர்ப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவினால், அரசாங்கத்துக்குள் மோதல் வெடித்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமெரிக்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், இதனால், அமெரிக்காவின் கொல்லைப் புறமாக சிறிலங்கா மாறும் என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக, மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், தமது செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் கலாநிதி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.