மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

கூட்டமைப்பை இன்று சந்திக்கிறார் ரணில்

அதிபர் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிபர் வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று காலை சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நடத்தவுள்ளார்.

வேட்புமனு தாக்கலின் பின்னரே யாருக்கு ஆதரவு என்று முடிவு – கூட்டமைப்பு

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளரையும், ஆதரிக்கும் விடயத்தில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கரிசனையாக இருக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் சஜித்தின் முயற்சி தோல்வி

ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முதற்கட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எழுக தமிழில் பங்கேற்க சம்பந்தனுக்கு அழைப்பு – வருவார் என விக்கி நம்பிக்கை

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நாளை ‘எழுக தமிழ்’ பேரணி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் நாளை எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது.

கூட்டமைப்புடன் இன்றும் நாளையும் ஐதேக தலைவர்கள் முக்கிய சந்திப்பு

வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

கோத்தாவின் பரப்புரைக்கு நிதியை கொட்டும் சீனா? – தெரியாது என்கிறார் பேச்சாளர்

வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளுக்கு சீனா பெருமளவில் நிதியை செலவிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம்

உள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிச் சக்திகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நிலைமைகள் – ஜெனிவா இணை அனுசரணை நாடுகள் கவலை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றும் வேகம்  மெதுவாகவே உள்ளது என்றும்,  இதற்கு, அதிகாரத்துவ தடைகள் காரணமாக இருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான இணைஅனுசரணை நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.