மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஆன்ம பரிசோதனை – ‘தி இந்து’ ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஜெனிவா தீர்மானத்தை கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழு – நியமிக்கிறது நாடு கடந்த தமிழீழ அரசு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக்  கண்காணிப்பதற்கு, அனைத்துலக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் வல்லுனர்களை உள்ளடக்கிய அனைத்துலக கண்காணிப்புக் குழுவொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமிக்கவுள்ளது.

ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது என்றே கூறலாம்.

தீர்மான வரைவின் சில பலவீனங்கள் முழுமையான தோல்வியை ஏற்படுத்தி விடும் – முதலமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் உள்ள சில பலவீனங்கள் முழுமையான செயற்பாடுகளையும் தோல்வியடையச் செய்து விடும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா தீர்மானம் வலுவான அனைத்துலகத் தலையீட்டை உறுதிப்படுத்த வேண்டும்

சிறிலங்காவில் போரின் போது, இடம்பெற்ற மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறை, வலுவான அனைத்துலகத் தலையீட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் அமைய வேண்டும் என்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவு- முழுமையாக

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைதகள் பேரவையில், அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இணைந்து புதிய- திருத்தப்பட்ட- தீர்மான வரைவை நேற்றுமாலை சமர்ப்பித்துள்ளன.

கி.பி. அரவிந்தன் தமிழர் வாழ்வியலின் ஒரு குறியீடு

ஈழப் போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர் கி.பி. அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி அறிமுக நிகழ்வு, கடந்த சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரிலுள்ள ஞானலிங்கேச்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவு – முழுமையாக

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்காவினால் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு வெளியாகியுள்ளது.

சுவிசில் இன்று ‘கி.பி.அரவிந்தன்- ஒரு கனவின் மீதி’ நூல் அறிமுக நிகழ்வு

ஈழப் போராட்ட முன்னோடியும், கவிஞரும், எழுத்தாளரும், ஊடகவியலாளருமான கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான ‘கி.பி.அரவிந்தன் – ஒரு கனவின் மீதி’ அறிமுக நிகழ்வு இன்று சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரில் நடைபெறவுள்ளது.

அனைத்துலக விசாரணையே நியாயம் தரும் – 170 கத்தோலிக்க குருமார் ஐ.நாவுக்கு கடிதம்

அனைத்துலக விசாரணை மட்டுமே, சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என்று, வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க குருமார்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.