உலகறிந்த நல்லாசான் நற்பணி தொடர வாழ்த்துகின்றோம்
ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் மானிடம் சுடரும் விடுதலைப் பாதையில் உயிர்த்த ஈழத்து நவீன நாடக முன்னோடி, மனிதக்கூத்தின் மாமகுடம். ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர்.
ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் மானிடம் சுடரும் விடுதலைப் பாதையில் உயிர்த்த ஈழத்து நவீன நாடக முன்னோடி, மனிதக்கூத்தின் மாமகுடம். ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர்.
காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது. இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ நடாத்தப்படுகிறது.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முக்கியமான இரண்டு செயல்முனைப்புகளில் ஈடுபட்டுள்ளது.
ஒசாமா பின்லேடன், அவரது மனைவி, பிள்ளைகள் நிராயுதபாணிகளாக இருக்கும் போது சுட்டுக்கொன்றது குறித்து கேள்வி எழுப்பாத ஐ.நா அதிகாரிகள், சிறிலங்காவில் போரின் இறுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து மாத்திரம் கேள்வி எழுப்புவது ஏன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் 30 ஆண்டினை எட்டியிருக்கும் நிலையில், தோற்றது ஒப்பந்தமா அல்லது இந்தியாவின் பாதுகாப்பா என்ற பேசு பொருளில் கருத்தரங்கம் ஒன்று தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ளது.
தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம் பெற்ற கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நினைவேந்திக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொண்டுள்ளது.
வீரம் கொழித்த மறவர் வாழும் வீரநிலம் சம்பூர். இங்கு இரத்த சகதியும் மரண ஓலமும் நிரம்பி வழிந்த நாள் இது. சிங்கள பௌத்த இராணுவத்தாலும், அவர்களோடு இயங்கிய கூலிப்படைகளாலும் அப்பாவி தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்ட கோரம் நடந்தேறி இன்றுடன் இருபத்தேழு ஆண்டுகள்.
வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பது தொடர்பாக, நடத்தப்படும் கலந்துரையாடலின் ஒரு கட்டமாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.