மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

சாவகச்சேரியில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தனித்துப் போட்டி – கட்டுப்பணம் செலுத்தினார் வரதர்

தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்ட வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

வடக்கில் 50 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 50 வரையான முஸ்லிம் வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழ். உள்ளூராட்சி சபைகள் குறித்து புளொட் – தமிழ் அரசுக் கட்சி இடையே ஆசனப் பங்கீட்டில் இணக்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, தமிழ் அரசுக் கட்சிக்கும், புளொட்டுக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஈபிஆர்எல்எவ் வெளியேறினாலும் கூட்டமைப்புக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு – என்கிறார் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபைக்கு சுயேட்சைக் குழு கட்டுப்பணம்

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பாகியது உதயசூரியன் கூட்டணி

ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், ஈபிஆர்எல்எவ் இணைந்து உருவாக்கியுள்ள தேர்தல் கூட்டணிக்கு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிணமிக்க வேண்டும் – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைவரையும் உள்ளடக்கிய – பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் காங்கிரஸ்

யாழ்.மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது.