சிறிலங்கா அதிபர் தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா
சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று, இந்தியாவின் ‘எகொனமிக் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று, இந்தியாவின் ‘எகொனமிக் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் (வயது-67) நேற்றிரவு மாரடைப்பினால் மரணமானார்.
இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து சிறிலங்கா வருத்தமடைந்துள்ளது என்றும் ‘இந்தியா ருடே’ செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கும், மாலைதீவுக்கும் தாம் மேற்கொள்ளவுள்ள பயணங்களின் மூலம், இரண்டு அண்டை நாடுகளுடனுமான, இருதரப்பு மற்றும் மூலோபாய உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கூடுதல் அதிகாரங்களுடன், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, பணி நீடிப்புச் செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் மூன்று காரணங்களுக்காக, வெற்றிகரமானதாக இருந்தது என்று புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு, உறுதி பூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதா என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.