மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

சிறிலங்கா அதிபர் புத்தகயவில் வழிபாடு- இன்று காலை நாடு திரும்புவார்

நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று புத்தகயாவுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இந்திய பாதுகாப்பு, நிதி அமைச்சர்களை தனித்தனியாகச் சந்தித்தார் மைத்திரி

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும், நிதி அமைச்சர் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி

புதுடெல்லியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக, அவருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர் பிரச்சினை மற்றும் அதுபற்றிய இந்திய நிலைப்பாடுகள் குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

சிறிலங்காவுக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் உள்ளது – இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் உள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுடெல்லியில் சிறிலங்கா அதிபருடனான பேச்சுக்களின் முடிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதியபோசனத்துடன் கூடிய தூதுக்குழு மட்டப் பேச்சுக்கள் ஆரம்பம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையிலான மதியபோசனப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

மோடியுடன் தனியாகப் பேச்சுக்களைத் துவங்கினார் மைத்திரி

புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  தனியான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.

புதுடெல்லியில் பேச்சுக்களைத் துவங்கினார் மைத்திரி

இந்தியாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லியில் இன்று தனது இராஜதந்திரப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.

புதுடெல்லி சென்ற மைத்திரியை வரவேற்றார் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன்

நான்கு நாள் பயணமாக இந்தியா சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு புதுடெல்லியில் இந்திய அரசாங்கத்தினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமனம்

ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தெளிவான அரசியல் திட்டத்தை சிறிலங்கா அரசு வெளியிட வேண்டும் – இந்திய அதிகாரி

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இனப்பிளவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, தெளிவானதொரு அரசியல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிறிலங்கா விவகாரங்களுடன் தொடர்புடைய இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.