மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

புதுடெல்லி சென்ற மைத்திரியை வரவேற்றார் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன்

நான்கு நாள் பயணமாக இந்தியா சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு புதுடெல்லியில் இந்திய அரசாங்கத்தினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமனம்

ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தெளிவான அரசியல் திட்டத்தை சிறிலங்கா அரசு வெளியிட வேண்டும் – இந்திய அதிகாரி

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இனப்பிளவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, தெளிவானதொரு அரசியல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிறிலங்கா விவகாரங்களுடன் தொடர்புடைய இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் மோடியின் வாழ்த்துச் செய்தி

சிறிலங்காவின் 67வது சுதந்திர நாளையொட்டி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை மக்களுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கும் செல்கிறார் மோடி

வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் – தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி புதுடெல்லியில் பேச்சு

தமிழ்நாடு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளன.

இந்திய வெளிவிவகாரச் செயலராக ஜெய்சங்கர் நியமனம் –அமைதிப்படையின் ஆலோசகராக இருந்தவர்

இந்திய வெளிவிவகாரச் செயலராக, எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த சுஜாதா சிங்கின் பதவிக்காலம் எட்டுமாதங்களால் குறைக்கப்பட்டதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அகதிகளை திருப்பி அழைப்பது குறித்து இந்திய – சிறிலங்கா பேச்சுக்கள் வெள்ளியன்று ஆரம்பம்

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் சிறிலங்காவும் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளன.

சிறிலங்காவில் புதிய நம்பிக்கை – அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

சிறிலங்காவில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதுடெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் மீது தீவிர கண்காணிப்பு – ஒபாமாவைக் குறிவைக்கலாம் என எச்சரிக்கை

இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கா அதிபர் ஒபாமாவை சிறிலங்காச் சேர்ந்தவர் குறிவைக்கலாம் என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.