இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்து செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்த விடயத்தில் இந்தியா செல்வாக்குச் செலுத்தவில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்காவின் முன்னைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய, இந்தியாவின் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை பணிப்பாளர் கே.பி.எஸ்.கில் நேற்று காலமானார்.
இந்தியாவும் ஜப்பானும் இணைந்து சிறிலங்காவில் 250 மில்லியன் டொலர் செலவில், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி முனையத்தை உருவாக்கவுள்ளன.
தொழில் பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு 500 ஏக்கர் காணியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.
சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களுடன் முறைப்படியான அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார்.
ஏனைய எல்லா பெருங்கடல்களையும் விட இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்படைந்து வருவதாக அன்டாட்டிக் மற்றும் பெருங்கடல் ஆய்வுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரம் வரையே அங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.
தெற்காசியாவில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தவுள்ளன.