மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

ஜெனிவாவில் 53 பரிந்துரைகளை ஏற்க மறுத்தது சிறிலங்கா

பூகோள கால மீளாய்வு அறிக்கையில் 53 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீது நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது.

ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த முதல் விவாதம்

சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஜெனிவாவில் நேற்று நடக்கவிருந்த சிறிலங்கா குறித்த விவாதம் திங்களன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடைபெறவிருந்த சிறிலங்கா குறித்த பூகோள கால மீளாய்வு விவாதம், வரும் 19ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை குறித்த விவாதம் – ஏமாற்றியது ஜெனிவா

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில், இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா தொடர்பான பூகோள காலமீளாய்வு விவாதம், பிற்போடப்பட்டுள்ளது.

சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – விசாரணைகள் முடிவு, தீர்ப்பு ஜூனில்

சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 ஈழத் தமிழர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று முடிவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் நாள் அறிவிக்கப்படும்.

ஜெனிவாவில் களம் இறங்குகிறார் அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடவுள்ளார்.

சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றமே – கனடா ஏமாற்றம்

சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா

லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் சிறிலங்கா

பணச்சலவை செயற்பாடுகள் குறித்த ஆபத்துக் கொண்ட, நாடுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளது.