மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

ஜெனிவாவில் திருத்தங்களின்றி- வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம்

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஜெனிவாவில் தொடங்கியது சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு மீதான விவாதம் – நேரலைப் பதிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு மீதான விவாதம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

அனைத்துலக நீதிபதியை கொழும்புக்கு அனுப்புகிறது ஜப்பான்

சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் குறித்து கவனிக்க, அனைத்துலக நீதிபதி ஒருவரை ஜப்பான் இந்தமாதம் கொழும்புக்கு அனுப்பவுள்ளது.

சிறிலங்காவைக் கண்காணிக்க 337,800 டொலர் நிதி கோருகிறது ஜெனிவா பணியகம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சமர்ப்பித்துள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவை நடைமுறைப்படுத்துவதற்கும், மீளாய்வுகள், கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கும், 337,800 டொலர் நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் மெளனமான இந்தியா, சீனா – சிறிலங்காவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்த பாகிஸ்தான்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின்  விசாரணை அறிக்கை தொடர்பான நேற்றைய  விவாதத்தில், இந்தியா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் கருத்து எதையும் வெளியிடவில்லை.

ஜெனிவாவில் நேற்று நிறைவேற்றப்படவில்லை சிறிலங்கா குறித்த தீர்மானம் – இன்றே விவாதம்

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் இன்று நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் தொடங்கியது சிறிலங்கா குறித்த விவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த விவாதம் சற்று  நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியது.

ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த முக்கிய விவாதம் – அமெரிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளதுடன், அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு, கொமன்வெல்த் நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை – தீர்மான வரைவில் மாற்றம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன், கூடிய நீதி விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் திருத்தப்பட்ட தீர்மான வரைவை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

இரண்டாவது தீர்மான வரைவை இன்று பேரவையில் சமர்ப்பிக்கிறது அமெரிக்கா

அமெரிக்கா தயாரித்துள்ள இரண்டாவது வரைவுத் தீர்மானம் குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், இன்று அந்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.