அம்பிட்டியே சுமணரதன தேரர் விளக்கமறியலில்
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் நேற்றுக் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
