வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது
2026 ஆம் ஆண்டிற்கான சிறிலங்கா அரசின் வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு 157 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.
2026 ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட விவாதங்களின் நிறைவில் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.
இதையடுத்து, இறுதி வாக்கெடுப்பு மாலை 7:30 மணிக்கு தொடங்கியது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 158 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டும், எதிராக வாக்களித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியைச் சேர்ந்த சிவஞானம் சிறிதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தனர். .
