சிறிலங்காவுக்கு 4வது ஆழ்கடல் ரோந்துக் கப்பலை வழங்கியது அமெரிக்கா
அமெரிக்க கடலோர காவல்படையின், ரோந்துக் கப்பலான USCGC Decisive சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேரிலான்டில் உள்ள பால்டிமோரில் கடந்த 2ஆம் திகதி நடந்த நிகழ்வில் இந்த கப்பல் சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடலோர காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் 4வது கப்பலாகும்.
சிறிலங்காவுடனான ஒத்துழைப்பு மற்றும் வலுவான இருதரப்பு இராஜதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கப்பல் கையளிப்பு அமைந்துள்ளது.
இந்தக் கப்பல் சில மாதங்களில் சிறிலங்காவைச் சென்றடையும்.
கடல்சார் தயார்நிலைக்கான நீடித்த அமெரிக்க உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், போதைப்பொருள் கடத்தல், கடத்தவுக்கு எதிரான மற்றும் தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளில் சிறிலங்காவின் எதிர்கால முயற்சிகளுக்கு தைரியத்தை அளிக்கும்.
இந்த பங்களிப்பு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சிறிலங்கா கடற்படையின் செயல்பாட்டு வலிமை மற்றும் திறன்களை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



