கொழும்பில் பிரமாண்டமாக நடந்த ஜேவிபியின் 36வது மகாவிரு நிகழ்வு
ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஜேவிபி கிளர்ச்சியில் உயிரிழந்த, காணாமல் போன உறுப்பினர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
36வது மகாவிரு நிகழ்வு என்ற பெயரில் இந்த நிகழ்வு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இடம்பெற்றது.
ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க, பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜேவிபியின் மாகாவிரு நினைவு நிகழ்வில் சிறிலங்காவின் அதிபர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.




