சீனாவின் அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு முன்னுரிமை
தனது அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாக சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவாக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் நாடாளுமன்ற ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
