மேலும்

Tag Archives: சிஐஏ

‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்

தன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள குற்றச்சாட்டு, இந்திய – சிறிலங்கா உறவுகளை தீவிரமாக பாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘தி ஹிந்து’ தெரிவித்துள்ளது.

சிறிலங்கா படைகள் மீது அவநம்பிக்கை வெளியிட்ட முன்னாள் நிதியமைச்சர் – சிஐஏ ஆவணத்தில் தகவல்

சிறிலங்கா படைகள் மீது தமக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிஐஏ) இரகசிய ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மகிந்தவைக் கொல்ல றோவும், சிஐஏயும் முயற்சி – கம்மன்பில குற்றச்சாட்டு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவும், அமெரிக்காவும் முயற்சித்து வருவதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

மகிந்தவை நாங்கள் தோற்கடிக்கவில்லை – குற்றச்சாட்டை மறுக்கிறது பிரித்தானியா

சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக, பிரித்தானிய, அமெரிக்க, இந்திய புலனாய்வு அமைப்புகள் பணியாற்றியதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் நிராகரித்துள்ளார்.

தமிழ்ச்செல்வன் படுகொலை குறித்த சிஐஏயின் இரகசிய அறிக்கை – விக்கிலீக்ஸ்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, உயர் பெறுமான இலக்குகளை (High Value Target) படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியை உடைக்க சிஐஏ சதி – சிறிலங்கா அரசு குற்றச்சாட்டு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு, மேற்குலக நாடுகள் சதி செய்வதாகவும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ இதுபோன்ற வேலைகளைச் செய்வது வழக்கமே என்றும் அமெரிக்கா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.