மேலும்

Tag Archives: கருணாசேன ஹெற்றியாராச்சி

பொறுப்புக்கூறல் விவகாரம் – சிறிலங்காவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் அழுத்தம்

சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், நல்லிணக்கம் மற்றும் நம்பகமான இடைக்கால நீதிப் பொறிமுறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய கொள்கை ஆய்வாளர்கள் குழு சிறிலங்காவில் – பாதுகாப்புச் செயலருடன் பேச்சு

இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி தலைமையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள், மற்றும் இராஜதந்திரிகளை உள்ளடக்கிய கொள்கை ஆய்வாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க தீவிரவாத முறியடிப்பு நிபுணர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் தீவிரவாத முறியடிப்பு நிபுணர் ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை இம்மாதம் கையளிப்பு

விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்றும், தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்றும், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மீளாய்வு செய்யப்படுவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

பதவி பறிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க காத்திருப்பு நிலைக்கு அனுப்பப்பட்டார்

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க எந்தப் பதவியும் வழங்கப்படாமல், காத்திருப்பு நிலைக்கு (pool) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய 4 இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு மாத தடுப்புக்காவல் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளையும், மேலும் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி – பஸ்நாயக்கவின் பதவி பறிப்பு

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்றதையடுத்து, 44 அமைச்சுக்களுக்கான செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.