மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கொழும்பு வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் முக்கிய இலக்கு

இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடேகி ரொஷிமிட்சு, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின், சுதந்திரமான – திறந்த இந்தோ- பசுபிக் வெளிவிவகாரக் கொள்கை குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சுவிசில் புகலிடம் தேடிய நிசாந்த சில்வா விவகாரம் – சிறிலங்கா அரசு விரைவில் முடிவு

சிறிலங்கா காவல்துறையின் குற்ற விசாரணைப் பிரிவின் ஆய்வாளர்  நிசாந்த சில்வா சுவிட்சர்லாந்தில் புகலிடம் தேடியுள்ள விவகாரம் தொடர்பாக, எதிர்கால நடவடிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்புக்குள் பிளவா? – மறுக்கிறது தலைமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றும், கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும், கூட்டமைப்பின் தலைவர் .இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்

இறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க தூதுவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு

சிறிலங்காவில் நிரந்தர அமைதி, நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ்  உறுதியளித்துள்ளார்.

சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநராக  முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க முயற்சி

வடக்கு மாகாண ஆளுநராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடத்தப்பட்ட தூதரக பணியாளர் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை – சுவிஸ்

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட தமது தூதரகத்தின் பெண் பணியாளர், உடல் நிலை மோசமாக இருப்பதால், தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளர் அச்சுறுத்தல் – அரசாங்கத்துக்கு தெரியாதாம்

சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

கடுமையான இழுபறிகளுக்குப் பின்னர் சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.