10ஆவது திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு
பத்தாவது ‘திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு 2025’ கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
பத்தாவது ‘திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு 2025’ கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்த, சிறிலங்கா தொடர்பான சர்வதேச பொறிமுறையை எதிர்ப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம், அரசாங்கம் முறைப்படி அறிவித்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஆண்டில் சிறிலங்கா படையினரின் வசம் இருந்த 86 ஏக்கர் தனியார் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன என்பதை சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிபர் முறையை அறிமுகப்படுத்திய பின்னர், அரசாங்கத்திற்குள் தனித்துவமான அதிகார மையங்கள் இருந்த காலங்களில் மட்டுமே, சிறிலங்கா பிரதமர்களுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்புகளை வழங்கியது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிய 62 மில்லியன் டொலர் கடனை கொடையாக மாற்றுவதற்கு இந்தியா நிபந்தனைகளை விதித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, விரைவில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதற்கான இடைக்கால தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாணசபைத் தேர்தல்களை காலவரையின்றிப் பிற்போடுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைய அமைச்சரவை மாற்றங்களை அடுத்து, அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.