மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

சிறிலங்காவுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு – இந்தியா மீது கொழும்பு வருத்தம்

இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து சிறிலங்கா வருத்தமடைந்துள்ளது என்றும் ‘இந்தியா ருடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுடனான மூலோபாய உறவு வலுப்பெறும் – இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுக்கும், மாலைதீவுக்கும் தாம் மேற்கொள்ளவுள்ள பயணங்களின் மூலம், இரண்டு அண்டை நாடுகளுடனுமான, இருதரப்பு மற்றும் மூலோபாய உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கூடுதல் அதிகாரங்களுடன் அஜித் டோவலுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கூடுதல் அதிகாரங்களுடன், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, பணி நீடிப்புச் செய்யப்பட்டுள்ளார்.

மோடியுடன் தனியாகவும் பேசினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் மூன்று காரணங்களுக்காக, வெற்றிகரமானதாக இருந்தது என்று புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியப் பிரதமர்

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு, உறுதி பூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் போட்டியிடுவாரா மைத்திரி? – புதுடெல்லியில் மனம் திறந்தார்

மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதா என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்

இந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை அவர், இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

புதுடெல்லி சென்றார் சிறிலங்கா அதிபர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி சென்றுள்ளார்.