மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

புலிகளுக்கான நிதி சேகரிப்பு தீவிரவாத செயற்பாடே – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தீர்மான வரைவு ஐ.நா பேரவையில் சமர்ப்பிப்பு – கண்காணிப்பு பணியகம் பற்றி ஏதுமில்லை

சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்ற ‘மாவீரர் நாள்’

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் மாவீரர் நாள் நினைவு கூரல் தொடர்பாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் காத்திரமான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்தில் எடுத்து, சிறிலங்கா தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்காவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்- ஐ.நா, உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் பரிந்துரை

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், ஐ.நாவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெளியானது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – சிறிலங்காவுக்கான பரிந்துரைகள்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில்  சற்று முன்னர் வெளியாகியுள்ளது.  2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கிறது – இணை அனுசரணை வழங்குகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கவுள்ளதாகவும், இதற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவுடன் அமெரிக்கா ஜெனிவாவில் பேச்சு – சிறிலங்கா குறித்தும் ஆராய்வு

சிறிலங்கா, உள்ளிட்ட பூகோள மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் ஜெனிவாவில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவை உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்ட அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பிரதிநிதி சிறிலங்காவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டுக்கான முன்உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் சிறிலங்கா குறித்து காரசாரமான விவாதம்

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.