மேலும்

செய்தியாளர்: நெறியாளர்

நிலைமாறும் உலகில் இந்திய – சிறிலங்கா உறவு – லோகன் பரமசாமி

சில மாதங்களு க்கு முன்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை தலைவர் சயிட் அல்-ஹுசைன் அவர்கள் தனது அறிக்கையில் மாவீரர் தினம் இலங்கையில் எல்லோரும் இணைந்து அனுட்டிக்கும்படியாக இல்லை என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

தமிழர் தாயகத்தில் பரவலாக மாவீரர் நாள் நிகழ்வுகள் – காலையிலேயே தொடங்கியது

தமிழீழ மாவீரர் நாளை முன்னிட்டு இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் இன்று காலை பல்வேறு மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தனர்.

காலத்திற்கு ஏற்ற ஆய்வு – லோகன் பரமசாமி

இதுவரையில் அரசியல் வரலாறு சார்ந்த தமிழ் மொழி புத்தகங்களை முன்பு ஒரு காலத்திலே மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டபுத்தகங்களுக்குப் பின்பு, மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் புத்தகங்களை தவிர வேறு எவருடைய புத்தகங்களையும் வாசித்ததாக ஞாபகம் இல்லை.

வெல்லப் போவது யார்? – சி. சரவணன்

1967-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி அரசியல் உருவானது. 1977-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி உறுதி செய்யப்பட்டது.

அடுத்து வரப்போகிறது லா-நினா – கடும் குளிர், வெள்ளப்பெருக்கு ஆபத்து

பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட, எல் நினோ எனப்படும் வெப்ப சலனத்தின் தாக்கத்தினால், பெரும்பாலான ஆசிய நாடுகள் கடும் வெப்பம், மற்றும் வரட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் லா –நினா என்ற குளிர் சலனத்தின் பிடியில் சிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பூர் அனல்மின் நிலையம்: மக்களைவிட மின்சாரம் மேலானதா? – கலாநிதி. கோ. அமிர்தலிங்கம்

உலக நாடுகள் அனைத்தும் நிலக்கரி மூலம் பெறப்படும் மின் சக்தியிலிருந்து படிப்படியாக விடுபட்டு மீள உருவாக்கக்கூடிய சக்தி மூலங்களான சூரிய ஒளி, மற்றும் காற்று மூலம் மின்சாரம் பெறக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

வரும் சனிக்கிழமை பாரீசில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் சனிக்கிழமை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ளது.

சரத் பொன்சேகா அம்பலப்படுத்திய இரகசியங்கள்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால இரகசியங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பில் நேற்று நடத்தியிருந்தார்.

ஆறுமுனைப் போட்டி: யாருக்கு இலாபம்? – ஆர்.மணி

இப்போதுள்ள நிலையே நீடித்தால், வரும் மே 16 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் முழுக்க, முழுக்க வித்தியாசமான தேர்தல்தான். காரணம், முதல் முறையாக தமிழ் நாடு ஆறுமுனைப் போட்டியை சந்திக்கப் போகிறது.

பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் -2016

தமிழர் திருநாளை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் “புலம்பெயர் தமிழர் திருநாள் 2016” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.