மேலும்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல – தேர்தல்கள் ஆணைக்குழு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தற்போது முறையாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருத முடியாது என்று  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகாரம் கோரி புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியியின் பிரிவினருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பதிவு செய்வதற்குத் தேவையான அளவுகோல்களின்படி, கட்சியின் முறையான தேர்தலை நடத்துவது உள்ளிட்ட நிபந்தனைகள் இதில் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *