மேலும்

எரிபொருள்களின் விலையை உயர்த்தியது சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலையை உயர்த்தியுள்ளது.

அதன்படி, லங்கா ஓட்டோ டீசலின் விலை லீற்றருக்கு ரூ. 5 அதிகரிக்கப்பட்டு, ரூ. 397 ஆக விற்கப்படுகிறது.

லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை ரூ. 15 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,  ரூ. 543 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை லீற்றருக்கு ரூ. 10 அதிகரித்து, ரூ. 424 ஆகவும், லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் யூரோ 4இன் விலை, ரூ. 15 அதிகரிக்கப்பட்டு ரூ. 490 ஆகவும் விற்கப்படுகிறது.

எனினும், லங்கா மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு ரூ. 285 என்றளவில் மாற்றமின்றி விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *