மேலும்

ஜெனிவா கூட்டத்தொடரில் இருந்து நழுவினார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

நாளை ஜெனிவாவில் தொடங்கவுள்ள  ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவர் சிறிலங்கா அரசாங்க குழுவுக்கு தலைமை தாங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்.

அவருக்குப் பதிலாக, ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக அறிக்கை சமர்ப்பிப்பார்.

அதேவேளை,  செப்ரெம்பர் 22 முதல் 28 ஆம் நாள் வரை நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்  வருடாந்தக் கூட்டங்களில்  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்வார்.

ஐ.நா பொதுச் சபையில் கடைசி நாளான செப்ரெம்பர் 28 ஆம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் உரையாற்றத்  திட்டமிடப்பட்டுள்ளது.

சிறிலஙகா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்த ஆண்டு ஐ.நா. பொதுச் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளமாட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *