மேலும்

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, இருவர் காயம்

திருகோணமலை-  சீனக்குடா,  கப்பல்துறை வீதியில்  நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கப்பல்துறை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைக் கண்டறிவதற்காக, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர்  எவ்.யு. வூட்லர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *