இலங்கையர்கள் நுழைவதற்கு தடைவிதித்தது கட்டார்
சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இன்று தொடக்கம் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கிலேயே கட்டார் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சிறிலங்கா, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், லெபனான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சிரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கே கட்டார் தற்காலிக தடையை விதித்துள்ளது.