மேலும்

Tag Archives: உபாலி தென்னக்கோன்

நிசாந்த சில்வாவின் இடமாற்றம் ரத்து – தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய காவல்துறை ஆணைக்குழு ரத்துச் செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேஜர் புலத்வத்த பிணையில் விடுவிப்பு

மூத்த ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபரான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான மேஜர் பிரபாத் சீவலி புத்வத்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் ஒளிப்படத்தை வெளியிட்ட திவயின ஊடகவியலாளர் கைது

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் கடத்தல் வழக்கின் சந்தேகநபரின் ஒளிப்படத்தை பிரசுரித்தமை தொடர்பாக, திவயின சிங்கள நாளிதழின் ஊடகவியலாளர் சமன் கமகே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குற்றமிழைத்த சிறிலங்கா படையினருக்கு சிறைச்சாலைக்குள் ஆசி வழங்கிய எல்லே குணவன்ச தேரர்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்த, மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை சிறைச்சாலையில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார் எல்லே குணவன்ச தேரர்.

லசந்த கொலையில் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.