சிறிலங்கா கடற்படையுடன் மீண்டும் கூட்டு போர்ப்பயிற்சியை ஆரம்பித்தது அமெரிக்க கடற்படை
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையுடனான போர்ப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையுடனான போர்ப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு, சென்று, பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது.