மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்காவுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே சோபாவில் கையெழுத்து – ருவன் விஜேவர்த்தன

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள  சோபா உடன்பாட்டின் நிபந்தனைகள், சிறிலங்காவுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே, அந்த உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

7 நாட்களுக்குள் தூக்கு இல்லை- சிறைச்சாலைகள் ஆணையாளர் உறுதி

அடுத்த 7 நாட்களுக்கு எந்த சிறைக்கைதியும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர

அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து,  வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மரணதண்டனைக்கு அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்பு

சிறிலங்காவில் 4 கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆணையிட்டுள்ள நிலையில், அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்புத் தோன்றியுள்ளது.

பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை

மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், அதிபர் தேர்தலை முதலில் நடத்துவதாயின் பதவியை விட்டு விலகப் போவதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

கோத்தாவை வேட்பாளராக ஓகஸ்ட் 11இல் அறிவிப்பார் மகிந்த – பசில் தகவல்

தமது கட்சியின் அதிபர் வேட்பாளரை எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் நாள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

“அதிபர் தேர்தலில் போட்டியிட நானும் தயார்“ – ராஜித சேனாரத்ன

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

போட்டியில் இருந்து விலகுகிறார் சிறிசேன

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1 பில்லியன் யென் கொடை வழங்குகிறது ஜப்பான்

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, ஜப்பான் 1 பில்லியன் யென், நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

சோபா உடன்பாட்டினால் சிறிலங்கா பிளவுபடும் – உதய கம்மன்பில

அமெரிக்காவுடன் சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் நிறுவனம்  போன்ற உடன்பாடுகளை செய்து கொள்வதால், அமெரிக்க- சீனா இடையிலான மோதல்களுக்கான களமாக சிறிலங்கா மாறி விடும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்திருக்கிறார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.