இன்று கிடைக்கிறது காபன் அறிக்கை – ஏமாற்றம் அளிக்கலாம் என்கிறார் சட்டமருத்துவ அதிகாரி
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி மாதிரி எலும்புகள் தொடர்பான றேடியோ காபன் ஆய்வு அறிக்கை இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

