இனிமேல் இப்படி நடக்கக் கூடாது – சிறிலங்கா அதிபர், பிரதமரிடம் சீனத் தூதுவர் வலியுறுத்தல்
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இனிமேல் மீண்டும் இடம்பெறாதிருப்பதை சிறிலங்கா அதிபரும், பிரதமரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் வலியுறுத்தியுள்ளார்.


