ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றார் ஈழத் தமிழர் விஜய் தணிகாசலம்
கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே.
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன், தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஒட்டாவாவில் உள்ள பௌத்த மத வழிபாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
தமிழ்ப் போராளி சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
எம்.வி.ஓசன் லேடி கப்பலில் இலங்கை தமிழ் அகதிகளை கனடாவுக்கு ஏற்றி வந்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு தமிழர்களும், குற்றவாளிகள் இல்லை என்று பிரிட்டிஷ் கொலம்பிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.