ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அவசர கடிதம்
நாடாமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், அரசியல்வாதிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்வது அல்லது மறு வெளியீடு செய்வதைத் தவிர்க்குமாறு, தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று ஊடக அமைப்புகளுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அரசியல் நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேர்காணல்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், மேம்பாட்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், விவரண நிகழ்ச்சிகள் அல்லது வேறு ஏதேனும் ஒத்த நிகழ்ச்சிகள் இவற்றில் உள்ளடங்கும்.
சில வேட்பாளர்களுக்கு சிறப்பு விளம்பரம் அளிக்கப்படுவதாகவும், இது மற்ற வேட்பாளர்களுக்கு சமவாய்ப்பு வழங்கும் உரிமைக்கு சவாலாக இருப்பதாகவும், தேர்தல்கள் ஆணையத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன” என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று வரையில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான எந்தவொரு முறைப்பாடும் தேர்தல் ஆணையத்துக்குக் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.