கூட்டுப் பயிற்சிக்காக இந்தியாவின் 3 போர்க்கப்பல்கள், 3 விமானங்கள் திருகோணமலை வருகை
சிறிலங்கா கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிக்காக, இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்களும் மூன்று விமானங்களும் நேற்று திருகோணமலையை வந்தடைந்துள்ளன.
சிறிலங்கா கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிக்காக, இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்களும் மூன்று விமானங்களும் நேற்று திருகோணமலையை வந்தடைந்துள்ளன.
இந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து நடத்தும் SLINEX-2018 கூட்டு கடற் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் நாள் வரை, திருகோணமைலைக் கடற்பரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.