மேலும்

Tag Archives: கேப்பாப்புலவு

தமிழர் தாயகத்தில் கரிநாளாக கடைப்பிடிக்கப்பட்ட சிறிலங்காவின் சுதந்திர நாள்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாளான இன்று, காலி முகத்திடலில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற அதேவேளை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் கரிநாளாக, துக்கநாளாக கடைப்பிடித்ததுடன், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தினர்.

இராணுவ முகாம் முன் போராட்டத்தில் குதித்தனர் கேப்பாப்புலவு மக்கள்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், இன்று சிறிலங்கா படைமுகாம் வாயிலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கேப்பாப்புலவில் 133.34 ஏக்கர் காணிகளை விடுவித்தது சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.

கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க 148 மில்லியன் ரூபா சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்கப்பட்டது

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறுவதற்கு, 148 மில்லியன் ரூபா, சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு: 5 மில்லியன் ரூபாவை வாங்கி விட்டு காலை வாரியது சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், பொதுமக்களின் 189 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறிலங்கா இராணுவம் ஏமாற்றியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால் உறுதியளிக்கப்பட்டது போல, நேற்று காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

10 ஆவது நாளில் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்- சிறிலங்கா பிரதமர் இன்று சந்திக்கிறார்

கேப்பாப்புலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்றுடன் பத்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் சிலரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அரசகாணியிலேயே உள்ளதாம் கேப்பாப்புலவு விமானப்படை முகாம்

அரச காணியிலேயே கேப்பாப்புலவில் சிறிலங்கா விமானப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.