ஐரோப்பிய ஒன்றியக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுடனும், ஏனைய மதத் தலைவர்களுடனும், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில், தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலதிக அதிகாரப் பகிர்வு தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்காது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இப்போதைய சூழலுக்குப் புதிய அரசியலமைப்பு பொருத்தமில்லை என்பதால், வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோட்டே, சிறி கல்யாணி சமக்ரி தர்ம மகாசங்க சபாவின், கல்யாணி காரக சபா ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ இப்போதைய சூழலில் நாட்டுக்கு அவசியம் இல்லை என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் கூட்டு சங்க சபா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி தன்மையை எந்த வழியிலும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்திருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனது ஆசி இல்லாமல் எவராலும் புதிய அரசாங்கத்தை அமைத்து விட முடியாது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவதற்கோ பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்குவதற்கோ எந்தவொரு சூழ்நிலையிலும் இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பௌத்த பீடாதிபதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகச் சந்திக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.