மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

புதுடெல்லியில் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் பயணமாக இன்று புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார். நாளை ஆரம்பமாகும் அனைத்துலக சூரிய சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஒரே ஆண்டில் கொழும்பு வந்த 65 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்

சிறிலங்காவில் சீன கடற்படைக் கப்பல்களின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா குறித்த தவறான புரிதல்களைக் கொண்டிருந்தது இந்தியா – மகிந்த

சிறிலங்காவில் இந்தியா துறைமுகங்களைக் கட்டவோ, நெடுஞ்சாலைகளை அமைக்கவோ இந்தியா ஆர்வம்காட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை குறித்து இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உத்தரவாதம்

அம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவொரு வெளிநாட்டுக் கடற்படைக்கும் வழங்கப்படாது என்று இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான அ்ட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவுடன் உயர்மட்ட உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுடன் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு இரட்டிப்பு நிதியுதவி – அயல்நாடுகளுக்கு கூடுதல் நிதி

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளும் உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் கொல்லைப்புற ஆதிக்கம் சிறிலங்காவில் நீண்டகாலம் நீடிக்காது – சியாம் சரண்

அண்டை நாடுகளுக்குள் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து இந்தியா கரிசனை கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் சிறிலங்கா மீது கவனம் செலுத்துவார் – பிரிஐ

சிறிலங்காவுடனான உறவுகளை முன்னேற்றுவது தொடர்பாக, இந்திய வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்றுள்ள விஜய் கேசவ் கோகலே கவனம் செலுத்துவார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லியில் மங்கள – சுஷ்மா பேச்சு

சிறிலங்காவின் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் புதுடெல்லியில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.