மேலும்

ஈரானிய மாலுமிகளை மாற்ற உதவுவதும் அமெரிக்க தடைக்கு வழிவகுக்கும்

தடை விதிக்கப்பட்ட கப்பல்களின் பணியாளர்களை மாற்றி அமைப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது உள்ளிட்ட செயல்கள், அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) கீழ், ஈரானியக் கப்பல்களில் இருந்த 40 பணியாளர்கள் தாயகம் திரும்புவதற்கு, சிறிலங்கா  உதவியமை குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் ஆங்கில  நாளிதழ் ஒன்றின் கேள்விக்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலில், தடைகளுக்கு உள்ளான கப்பல்களுக்கு எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள், பராமரிப்புச் சேவைகளை வழங்குவது அல்லது பணியாளர்களை மாற்றி அமைப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது போன்றவை அமெரிக்கத் தடைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானின் இராணுவ மற்றும் பெருக்கச் செயல்பாடுகள் (proliferation activities), கொள்முதல் திட்டங்கள், தீங்கிழைக்கும் இணையச் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம் ஆகியவற்றை அமெரிக்கா தொடர்ந்து முறியடிக்கும், அம்பலப்படுத்தும் மற்றும் ஒழிக்கும்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யும் முயற்சியில் அனைத்துலக சமூகம் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப்  பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *