தென்னாபிரிக்க அதிபரிடம் சான்றுகளை கையளித்தார் உதேனி ராஜபக்ச
தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச, தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசவிடம் நற்சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.
பிரிட்டோரியாவில் உள்ள செஃபாகோ எம். மக்காதோ ஜனாதிபதி விருந்தினர் மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சிறிலங்காவும். தென்னாபிரிக்காவும் இராஜதந்திர மற்றும் மக்களிடையேயான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை தென்னாபிரிக்க அதிபர் ரமபோச மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, தென்னாபிரிக்காவின் சொந்த அனுபவத்தால் ஈர்க்கப்பட்டு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சிறிலங்காவின் முயற்சிகள் குறித்தும் உதேனி ராஜபக்ச, தென்னாபிரிக்க அதிபர் ரமபோசவிடம் விளக்கியுள்ளார்.
சிறிலங்கா விமானப்படையில் 37 ஆண்டுகள் பணியாற்றிய உதேனி ராஜபக்ச, 2023 ஆம் ஆண்டில் அதன் 19 வது தளபதியாக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.