சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட கைது
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.
சிறிலங்கா கடற்படையில் யோஷித ராஜபக்சவை நிறைவேற்று அதிகாரியாக நியமித்தது மற்றும் அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் றோயல் கடற்படைக் கல்லூரியில் அவரைப் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பான விசாரணைக்காக, அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி, அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.
இந்த நிலையில் யோஷித ராஜபக்சவும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வசந்த கரன்னகொட இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தக் கைது அதே விசாரணையுடன் தொடர்புடையதா என அதிகாரப்பூர்வமாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு உறுதிப்படுத்தவில்லை.
