மேலும்

சிறிலங்காவின் 27வது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றார் டேமியன் பெர்னான்டோ

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோ, நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படையின் 27வது தளபதியாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட   வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோ நேற்றுக்காலை அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

அக்குரேகொடவில் உள்ள சிறிலங்கா கடற்படை தலைமையகத்தில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து, அவர் முதலாவது அதிகாரபூர்வ சந்திப்பை, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவுடன் மேற்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *